இந்தியாவில் இரு பெண்களில் ஒருவருக்கு முற்றிய நிலையில்தான் மார்பக புற்றுநோய் கண்டுபிடிக்கப்படுகின்றது. கிராமப்புற பெண்களை விட நகர்புற பெண்கள் தான் மார்பக புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றன. அனைத்து புற்று நோய்களையும் அறிகுறி இல்லாமல் தொடக்க நிலையில் கண்டறிய முடியாது. ஆனால் அறிகுறி இல்லாமல் இருந்தாலும் கூட மார்பக புற்று நோயை பரிசோதனைகள் மூலம் கண்டறிய முடியும்.

இவ்வாறு கண்டறிந்து உடனடியாக சிகிச்சை அளிப்பதன் மூலம் பாதிக்கப்பட்ட பெண்ணை காப்பாற்றலாம். என் நிலையில் 40 வயதை கடந்த பெண்கள் இரண்டு வருடத்திற்கு ஒருமுறை மார்பக புற்றுநோய் பரிசோதனை எடுத்துக் கொள்ள வேண்டுமென சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கேட்டுக் கொண்டுள்ளார். சென்னையில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர், குடும்பத்தில் யாருக்காவது புற்றுநோய் இருந்தால் 35 வயதிற்கு மேல் ஆண்டுக்கு ஒரு முறை பரிசோதனை செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.