சமூக வலைதளங்களில் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி வரும் வீடியோ ஒன்றில், தனது கணவனை மற்றொரு பெண்ணுடன் உல்லாசமாக இருந்த பது திடீரென அந்த அறைக்கு நேரிடையாக சென்று மனைவி பிடித்த காட்சி பதிவாகியுள்ளது. ‘Ghar Ke Kalesh’ என்ற எக்ஸ் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவில், மனைவி மிகவும் கோபத்துடன் “என் பிள்ளைத்து நாலு வயசுதான்… இந்த பெண்ணுக்காக என்னை அடிச்சு வீட்டைவிட்டு அனுப்பினான்!” என கூறி கணவனின் தவறுகளை சுட்டி காட்டி கோபத்தில் கத்துகிறார் . மேலும், கணவனின் ஆடைகள், பரிசுகள் என அனைத்தும் அந்த அறையில் இருப்பதை மனைவி காண்பித்து, உறவின் உண்மையை வெளிக்கொணர்கிறார்.

இந்த வீடியோ இணையத்தில் வெளியாகிய பிறகு, மக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பலர் இந்த வகையான மறைமுக உறவுகளுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். “நட்பு என்ற பெயரில் வெளியில் புதிய உறவுகள் தொடங்கும் முன், தற்போதைய உறவை நேர்மையாக முடிக்க வேண்டும்”, “ஏமாற்றம் என்பது குடும்பத்தின் மீதான நம்பிக்கையை முற்றிலும் சிதைக்கும்” என சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பரவி வருகின்றன. அதேசமயம், சிலர் மனைவியின் துணிச்சலுக்கு பாராட்டும் தெரிவித்து, “அவள் வேதனையை வெளிப்படுத்திய விதம் அனைவரையும் கவலைப்பட வைத்திருக்கிறது” என பதிவிட்டு வருகின்றனர்.

இந்த சம்பவம், நாட்டில் திருமண உறவுகளின் நிலை குறித்து புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது. விரைவில் உருவாகும் காதல், அதற்குப் பிறகு வரும் விரிசல்கள், அதனால் ஏற்படும் பிளவு – இவை அனைத்தும் குழந்தைகளின் எதிர்காலத்தையும் பாதிக்கக்கூடியவை. இங்கு பாதிக்கப்பட்ட தம்பதிக்கு நான்கு வயது குழந்தை இருப்பதால், அதன் வளர்ச்சியிலும் பாதிப்பு ஏற்படும் என்பது உறுதி. இத்தகைய சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்க, சமூக விழிப்புணர்வும், குடும்ப ஆலோசனைவாதிகளின் பங்களிப்பும் அவசியம் என்றே நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.