அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு இன்று மதுரையில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் விஜயை மறைமுகமாக தாக்கி பேசினார். அதாவது தற்போது 4 படம் நன்றாக ஓடிவிட்டாலே நான்தான் அடுத்த முதல்வர் என்று நடிகர்கள் நினைப்பதாக கூறினார். இது எல்லாத்துக்கும் மக்கள் பதில் சொல்வார்கள். அதன் பிறகு முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடுகளுக்கு சென்று வருகிறேன் என்று கூறும் முதல்வர் கலர் கலராக போட்டோ ஷூட் நடத்துகிறார்.

இப்போது உள்ள முதல்வரை நினைத்தால் எனக்கு சிரிப்பாக இருக்கிறது. ஏதோ ஒரு நிகழ்ச்சியில் எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சியை நடத்துகிறோம் என்கிறார். ஆனால் உங்கள் ஆட்சியில் உள்ள குறைகளை சொல்ல முடியாமல் தவிக்கிறோம் என்பது தான் உண்மை என்று கூறினார். மேலும் தமிழக வெற்றி கழகம் மற்றும் அதிமுக கூட்டணி அமைக்கும் என்று கூறப்படும் நிலையில் எடப்பாடி பழனிசாமி விஜயை அதிமுகவிலர் விமர்சிக்க கூடாது என்று உத்தரவு போட்டுள்ள நிலையில் தற்போது செல்லூர் ராஜு மறைமுகமாக விமர்சித்துள்ளது பேசும் பொருளாக மாறியுள்ளது.