மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் அரசுத்துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீட்டின் கீழ் அரசுத்துறைகளில் உள்ள பின்னடைவு காலிப் பணியிடங்களை நிரப்ப, சிறப்பு ஆட்சேர்ப்பு தேர்வு நடத்தப்பட்டு பணி வாய்ப்பு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சட்டப்பேரவை கூட்டத்தில் வெளியிட்ட அறிவிப்புக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

காலி பணியிடங்களை ஓராண்டுக்குள் நிரப்ப அந்தந்த துறைகள் மூலமாக பணியிடங்களை நிர்ணயம் செய்ய வேண்டும். தொகுப்பு ஊதியத்தில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு ஆட்சேர்ப்பு தேர்வில் பங்கேற்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. துறைகள் மூலம் பணியிடங்களை நிர்ணயம் செய்து சிறப்பு ஆட்சேர்ப்பு தேர்வு நடத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.