மலையாள திரையுலகில் ஹேமாக கமிட்டி அறிக்கை வெளியான பிறகு அடுத்த அடுத்த நடிகர்கள் மீது பாலியல் புகார் குவிந்து வரும் நிலையில் பல முன்னணி நடிகர்கள் கூட சிக்கிகிறார்கள். ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி திரையுலகில் புயலைக் கிளப்பிய நிலையில் நடிகைகள் பலரும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்துகள் தொடர்பாக தைரியமாக புகார் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் மலையாள சினிமாவில் பிரபல நடிகராக இருக்கும் ஜெயச்சந்திரனுக்கு எதிராக தற்போது கேரள போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர். அவர் முன்ஜாமின் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனு கொடுத்த நிலையில் அவருடைய வழக்கு விரைவில் விசாரணைக்கு வர இருக்கின்றது.

இந்த நிலையில் தான் தற்போது அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. அதாவது நடிகர் ஜெயச்சந்திரன் 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக நடிகர் ஜெயச்சந்திரன் மீது கடந்த 2024 ஆம் ஆண்டு புகார் கொடுக்கப்பட்ட நிலையில் சிறுமியின் பெற்றோர் ஜெயச்சந்திரன் மீது நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்துவதாக போலீசார் மீது குற்றச்சாட்டு தெரிவித்து இருந்தனர். மேலும் இந்த நிலையில் தான் தற்போது அவருக்கு லுக்அவுட் நோட்டீஸ் விடப்பட்டுள்ளது.