பிஎஸ்என்எல் மலிவு விலையில் ரீசார்ஜ் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்துக்குள் 4ஜி சேவையை கொண்டு வர முடிவு செய்துள்ள பிஎஸ்என்எல், இதற்கான பணிகளை வேகப்படுத்தி உள்ளது. 4ஜி சேவை வந்தால் பிஎஸ்என்எல் ரீசார்ஜ் கட்டணம் உயரும் என தகவல் பரவி வருகிறது. இது குறித்து பேசிய பிஎஸ்என்எல் வாரிய இயக்குநர் சந்தீப் கோவில், “4ஜி வந்த பிறகும் மலிவு விலையில் தான் சேவை வழங்கப்படும். எந்த ரீசார்ஜ் கட்டணமும் உயராது” என்று கூறியுள்ளார்.