வேட்டையன் பட த்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் கூலி என்ற படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கிவருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் தற்போது விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது.

முதற்கட்டமாக ரஜினிகாந்த் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இந்தப் படத்தில் சத்யராஜ் ஸ்ருதிஹாசன், ரேபா மோனிகா ஜான் மற்றும் பகத் பாஸில் போன்றோர் நடிப்பதாக தகவல் வெளியானது.

மேலும் கூலி படம் தொடர்பாக அவ்வப்போது புது புது அப்டேட்டுகளை படக்குழுவினர் வெளியிட்டு வருவது ரசிகர்களிடம் சுவாரசியத்தை தூண்டி உள்ளது. இந்நிலையில் தற்போது மஞ்சள் பாய்ஸ் படத்தில் நடித்த சவுபின் ஷாகிர் இந்த படத்தில் தயால் என்ற கேரக்டரில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த படத்தில் சத்யராஜ் நடிக்க உள்ளதாகவும் படக்குழு அதிகாரப்பூர்வமான போஸ்டரை வெளியிட்டு ரசிகர்களுக்கே இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அதன்படி சத்யராஜ் இந்த படத்தில் ராஜசேகர் என்ற கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் சத்யராஜ் இருவரும் சுமார் 38 வருடங்களுக்குப் பின் இந்த படத்தின் மூலம் இணைந்து நடிப்பது குறிப்பிடத்தக்கது.

“>