கேரளாவை பூர்வீகமாக கொண்ட நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ்.  இவர் நடிப்பில் இது என்ன மாயம் என்ற திரைப்படம் முதன் முதலில் வெளியானது இதில் இவர் விக்ரம் பிரபு உடன் நடித்திருப்பார். கீர்த்தி சுரேஷ் தாயார் மேனகா கோலிவுட்டில் பிரபலமான நடிகை என்பதால் இவருக்கு சினிமா வட்டாரத்தில் அதிகமான மவுசு இருக்கிறது.  சினிமாவிற்கு வந்த ஆரம்பத்தில் ஒரு சில படங்களில் நடித்து வந்த கீர்த்தி சுரேஷ் மகாநதி என்ற படத்தில் தேசிய விருதை பெற்றார்.

இந்த நிலையில் கோலிவுட், பாலிவுட் என்று கலக்கி வரும் கீர்த்தியின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி கீர்த்தி சுரேஷிடம் 40 கோடி வரை சொத்துக்கள் உள்ளன. அதோடு இவர் ஒரு படத்தில் நடிப்பதற்கு நான்கு கோடி சம்பளம் வாங்குகிறாராம். மேலும் சென்னையில் சுமார் 6 கோடி மதிப்புள்ள வீடு இருக்கிறது. பல லட்சம் மதிப்புள்ள 5 பிராண்ட் கார்கள் வைத்திருக்கிறாராம்.