தேர்தல் வாக்குறுதியாக தெலுங்கானா அரசானது விவசாயிகளுக்கு பயிர் கடன் தள்ளுபடி செய்யவேண்டும் என்று அறிவித்தது. இந்த நிலையில் இந்த வாக்குறுதி நிறைவேற்றும் விதமாக ஒரு விவசாயிக்கு இரண்டு லட்சம் ரூபாய் வரையில் பயிர் கடனை தள்ளுபடி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது 30 லட்சம் விவசாயிகளின் தற்போதைய பயிர் கடனை தள்ளுபடி செய்து 32,000 கோடி அரசு எடுக்க திட்டமிட்டு இருக்கிறது.

இந்த நிலையில் பயிர் கடனை அரசு ஏற்றுக் கொண்டது குறித்து சிறப்பு கழகம் அமைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 32000 கோடி பயிர் கடனை மாற்ற வங்கியாளர்கள் ஒப்புக்கொண்டதாகவும் இதுகுறித்து வங்கியாளர்களுடன் நிதித்துறை பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.