மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது 46 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது மேலும் 2024 ஜனவரி முதல் ஜூன் மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வானது விரைவில் வெளியாக இருக்கிறது. கடந்த மாதங்களுக்கான ஏஐசிபிஐ தகவல்களின் படி நான்கு சதவீத அகவிலைப்படி உயர்வு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மத்திய அரசு ஊழியர்கள் மொத்தம் 50 சதவீத அகவிலைப்படியை  பெறுவார்கள்.

அதன்பிறகு அரசு ஊழியர்களுக்கான வீட்டு வாடகை கொடுப்பனவும் அதிகரிக்க உள்ளது. வீட்டு வாடகை கொடுப்பனவு ஊழியர்கள் வசிக்கும் நகரத்திற்கு ஏற்ப xyz என்று மூன்று அடுக்குகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இது இரண்டும் உயர்த்தப்படும் பட்சத்தி அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளமும் உயரும். இதற்கான அதிகாரப்பூர்வ தகவல்கள் ஹோலிக்கு முன்னதாக வெளியிடப்படலாம் எனவும் கூறப்படுகிறது.