ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் மயிலபுரம் அருகே இருக்கும் கிராமத்தைச் சேர்ந்த வாலிபருக்கு திருமணம் நடந்தது. நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் அமிர்தநகர் கிராமத்தைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் தங்களது 3 வயது மகளுடன் பங்கேற்றனர். அப்போது ரஹமத்துல்லா(26) என்பவர் சிறுமியுடன் விளையாடிக் கொண்டிருந்தார்.

மறுநாள் காலை திருமணம் முடிந்த சில நிமிடங்களில் சிறுமியை காணாமல் போய்விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் பல்வேறு இடங்களில் மகளை தேடி பார்த்தனர். அப்போது அங்கு வந்த ரஹமத்துல்லாவிடம் சிறுமி குறித்து கேட்டபோது அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததோடு அவரது சட்டையில் ரத்தக்கறை இருந்தது.

இதுகுறித்து கேட்டபோது ரஹமத்துல்லா அங்கிருந்து தப்பியோட முயற்சி செய்தார். அவரை அங்கிருந்தவர்கள் மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்து விசாரித்த போது சிறுமியை மறைவான இடத்திற்கு தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளார்.

மேலும் சிறுமியை அடித்து கொலை செய்து புதரில் வீசியதும் தெரியவந்தது. அந்த இடத்திற்கு சென்று சிறுமியின் சடலத்தை மீட்ட பெற்றோர் கதறி அழுதனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் ரஹமத்துல்லாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.