ஹாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்தவர் டேமியன் ஸ்டோன். இவர் பாடி பில்டரும் கூட. இவருக்கு 32 வயது ஆகும் நிலையில் திடீரென மரணம் அடைந்தார். இவர் மால்டோவில் பிறந்த நிலையில் தன்னுடைய நடிப்பு மற்றும் நேர்த்தியான உடல் அமைப்பினால் பலரையும் கவர்ந்தவர்.

தன் பாலின ஈர்ப்பாளரான இவர் சில ஆபாச படங்களிலும் நடித்துள்ளார். இவர் பென்சிலோனியாவில் வசித்து வந்த நிலையில் 3 முறை பாடி பில்டிங் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளார். மேலும் இவருக்கு 32 வயதாகும் நிலையில் திடீரென இறந்து விட்டதாக அறிவித்துள்ளனர். ஆனால் அவரின் இறப்புக்கான காரணத்தை சொல்லவில்லை. மேலும் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.