ஸ்பெயின் நாட்டில் உள்ள ஒரு நகரத்தில் நேற்று இரவு ஸ்டாண்ட் அப் காமெடி நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஜேமி கரவாகா என்ற காமெடியன் கலந்து கொண்டு பார்வையாளர்களை மகிழ்வித்து கொண்டிருந்தார். இந்த நிகழ்ச்சியில் பிரபல இசை கலைஞரான ஆல்பர்டோ புகிலட்டோ என்பவரும் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது ஆல்பர்டோவின் 3 மாத கைக்குழந்தை பற்றி பாலியல் ரீதியாக கோபம் மூட்டும் வகையில் ஜேமி பேசினார்.

இதனால் கோபமடைந்த ஆல்பர்டோ உடனடியாக மேடையில் ஏறி ஜேமியின் முகத்தில் ஒரு குத்துவிட்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நடந்த விஷயத்திற்கு ஜேமி ஆல்பர்டோவிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும் அவரும் மன்னிப்பை ஏற்றுக் கொண்டதாக கூறியுள்ளார். இருப்பினும் இந்த விஷயம் தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.