
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஜான்பூர் பகுதியில் சிந்தா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 3 திருமணங்கள் நடந்துள்ள நிலையில் 9 மகன்கள் இருக்கிறார்கள். இதில் 7 பேர் இறந்து விட்டனர். இந்நிலையில் கடந்த 36 வருடங்களாக சிந்தா பெண் வேடமிட்டு ஒரு பெண் போல் வாழ்ந்து வருகிறார். அதாவது அவருடைய மனைவி இறந்த பிறகு ஒரு ஆவி தன்னை பின் தொடர்வதாக கூறிய அவர் அந்த ஆன்மா தான் ஒரு பெண் போல் தன்னை வாழ்வதற்கு கட்டாயப்படுத்தியதாகவும் கூறுகிறார்.
அந்த ஆவிக்கு பயந்து கிட்டத்தட்ட 36 வருடங்களாக அவர் பெண்ணாகவே மாறி வாழ்ந்து வருகிறார். மேலும் இது தொடர்பான பேட்டி சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டிருக்கலாம் இல்லை எனில் மூடநம்பிக்கையில் இப்படி பேசி இருக்கலாம் என பலரும் கூறி வருகிறார்கள்.