
கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள 3 ஏடிஎம் மையங்களில் இருந்து ரூ.65 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த கொள்ளையர்கள் கண்டெய்னர் லாரியில் தமிழகம் வழியாக அவர்கள் சொந்த ஊருக்கு தப்பிச் செல்ல முயன்றனர்.
அப்போது நாமக்கல் குமாரபாளையம் கத்தேரியில் போலீசார் வாகனத் தணிக்கை நடத்திய போது சந்தேகத்திற்குரிய கண்டெய்னர் லாரி நிற்காமல் சென்றது. உடனே துரத்தி சென்று மடக்கி பிடித்தது காவல்துறை இதில் ஒரு வடமாநில நபர் ஒருவர் என்கவுண்டர் செய்யப்பட்டார்.
அதனைத்தொடர்ந்து சிக்கிய நபர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தது.
இவர்கள், ATM மெஷின்களை மிக விரைவாக, 3 நிமிடங்களில் உடைத்து, உள்ளே இருக்கும் பணத்திற்கு எந்த சேதமும் ஏற்படாமல் கொள்ளையடிக்கும் திறமையைப் பெற்றுள்ளனர். இதுவரை 10 கோடிக்கு மேல் பணம் கொள்ளையடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த கொள்ளையர்களை துப்பாக்கியை காட்டி மிரட்டியபோதிலும், பயப்படவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.. பிடிபட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்ட போது, கொள்ளை அடிப்பதற்கு பயிற்சி எடுத்திருப்பதும் , அத்துடன் அவர்கள் பெட்ரா நிறுவனத்தின் தயாரிப்பான ATM களை மட்டுமே குறி வைத்து கொள்ளையடித்தது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்த காவல்துறையின் தொடர் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.