
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நீட் தேர்வினால் தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் விவரங்களை வெளியிட்டு உதயநிதி நீட் தேர்வு ரகசியம் வெளிவர இன்னும் எத்தனை உயிர்கள் போக வேண்டும் என்று கேட்டிருந்தார். அதோடு நீட் தேர்வை ஒழிப்போம் என்று திமுக பொய்யான வாக்குறுதி கொடுத்த நிலையில் அவர்களின் கையில் நீட் தேர்வினால் உயிரிழப்பவர்களின் ரத்த கறைகள் படிந்துள்ளது என்றும் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்தார். இதற்கு தற்போது அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி கொடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
நீட் தேர்வு அச்சத்தால் சென்னையில் தர்ஷினி என்ற மாணவி தன் இன்னுயிரை மாய்த்துக்கொண்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
நீட் என்ற தேர்வை நாட்டிற்கே அறிமுகப்படுத்தி, கூட்டணி கட்சியுடன் சேர்ந்து அதனை உச்சநீதிமன்றம் வரை சென்று வாதாடி, தமிழ்நாடு மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்திட…
— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) March 29, 2025
அதில் கூறப்பட்டிருப்பதாவது, ஒன்றியத்தில் இந்தியா கூட்டணியின் ஆட்சியமைந்தால் ‘நீட் தேர்வு ரத்து செய்யப்படும்’ என்று மாண்புமிகு கழகத்தலைவர் உறுதியளித்திருந்தார். அதே உறுதி மொழியை திரு. ராகுல் காந்தி அவர்களையும் அளிக்கச் செய்திருந்தார். டெல்லியில் மூன்று கார்களை மாற்றி மாற்றிச் சென்று ‘பிரத்தியேகமாக யாரையும் சந்திக்க வரவில்லை’ என்று சொல்லிவிட்டு இரவோடு இரவாக உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா அவர்களைச் சந்தித்த திரு. எடப்பாடி பழனிசாமி அவர்களே! பாஜக – அதிமுக கூட்டணி அமையும் என்று அமித்ஷா இன்று கூடச் சொல்லியிருக்கிறார். தமிழ்நாட்டின் நலன்களே உங்களுக்கு முக்கியம் என்றால் நீட் தேர்வை ரத்து செய்தால்தான் கூட்டணி என்று உறுதியைப் பெற்றுக் கொண்டு கூட்டணி வைக்க நீங்கள் தயாரா? என்று பதிவிட்டுள்ளார்.
ஒன்றியத்தில் இந்தியா கூட்டணியின் ஆட்சியமைந்தால் ‘நீட் தேர்வு ரத்து செய்யப்படும்’ என்று மாண்புமிகு கழகத்தலைவர் உறுதியளித்திருந்தார். அதே உறுதிமொழியை திரு. ராகுல் காந்தி அவர்களையும் அளிக்கச் செய்திருந்தார்.
டெல்லியில் மூன்று கார்களை மாற்றி மாற்றிச் சென்று ‘பிரத்தியேகமாக யாரையும்… https://t.co/rmnVY7XBI1
— Thangam Thenarasu (@TThenarasu) March 29, 2025