செய்தியாளர்களிடம் பேசிய தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழகம் சார்பாக சென்னை, செங்கல்பட்டு உட்பட நான்கு மாவட்டங்கள் சேர்த்து 416 சுய உதவி குழுக்களுக்கு  வங்கி கடன் கிட்டத்தட்ட 125 கோடி ரூபாய் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

சென்ற ஆண்டு நம்முடைய இலக்கு 28 ஆயிரம் கோடி. மகளிர் சுய உதவி குழுக்களுக்கு இந்த கடனாக சென்ற ஆண்டு 28 ஆயிரம் கோடி  டார்கெட்டை அடைந்தோம். சட்டசபையில் பேசும்பொழுது இந்த ஆண்டு 28,000 கோடியில் இருந்து 30 ஆயிரம் கோடியாக கொடுக்கப்படும் என்று  சொன்னோம். இதுவரைக்கும் கிட்டத்தட்ட 22,000 கோடி கொடுத்திருக்கின்றோம்.  சொன்னபடி 30 ஆயிரம் டார்கெட்டை அடைந்து விடுவோம்.

எனவே மகளிர் சுய உதவி குழுக்கள் அனைத்துவருக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நம்முடைய முதலமைச்சர் சொன்னது மாதிரி இது ஒரு கடன் உதவியாக நான் பார்க்கவில்லை. அவர்கள் உழைப்பின் மீது வைத்திருக்கக் கூடிய நம்பிக்கை தொகையாக இந்த அரசு பார்க்கிறது என தெரிவித்தார்.