என் மண், என் மக்கள்  யாத்திரையில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை,  நம் சகோதரிகளுக்கு ஒரு வார்த்தை சொல்ல  கடமைப்பட்டிருக்கிறேன். ஓர் ஆண்டுக்கு மோடி ஐயா உங்களுக்கு கொடுக்கக்கூடிய பணம்,  அக்கவுண்டில் மூலமாக வரும் பணம் மட்டுமே….  எட்டு அரை லட்சம் கோடி ரூபாய் வங்கி கணக்கிற்கு பணம் வருகின்றது. விவசாய பெருமக்களுக்கு 6000 ரூபாய் வருகுது. அண்ணே பயிர் காப்பீடு திட்டம் போட்டு இருக்கிறேன், அதுல  வந்துட்டேன்னு அண்ணே…

அண்ணே நான் மோடி ஐயா  மானிய சிலிண்டர் வாங்குறேன்  ரூ.300 வந்துட்டேன் அண்ணே…. நான் வீடு ஒன்னு போட்டு இருக்கிறேன்,  2,55,000 வந்துட்டு அண்ணே. மானியம் வந்துவிட்டது அண்ணே….  ஐயா வந்துட்டு என சொல்றாங்க…  நான் பொய் எல்லாம் சொல்லல,  உண்மைய தான் சொல்லுவேன்… வந்துடுச்சுன்னு எனக்கே தெரியாது.

பிஜேபிகாரங்களுக்கு தெரியாது மோடி ஐயா அனுப்புறது….  ஐயா நான் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் இருந்தேன்  அண்ணே…. மோடி ஐயா வார வாரம் சம்பளம்,  நான் கூலி என்று சொல்ல மாட்டேன்…  சம்பளம் உங்களது வேலை…. உழைப்பு வார வாரம் அக்கவுண்டுக்கு பணம் வந்துவிடும். அதுபோல ஒரு வருஷத்துக்கு எட்டு அரை லட்சம் கோடி ரூபாய் போட்டோ எடுக்காமல்,  உங்களை வெயில்ல நிக்க விடாமல்…. 

மஞ்சப்பை கொடுக்காமல்….  ஸ்டிக்கர் ஒட்டாமல்….  தண்டோரா போடாம….  எங்கள் தளபதி ஆட்சியிலே கொடுக்கிறோம், கொடுக்கிறோம் என்று சொல்லாமல்….  ஒருவேளை வாங்கி விட்டால்,  பொன்முடி போன்ற அமைச்சர்கள்….  ஓசி ஓசி என்று திட்டாமல், சத்தமே இல்லாமல்…. மௌனப் புரட்சி இந்தியாவிலே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

எட்டு அரை லட்சம் கோடி ரூபாய் உங்கள் வங்கி கணக்கிற்கு  பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கொடுக்கின்றார். இவன்  கொடுக்கிற ஆயிரம் ரூபாய்க்கு அடிக்கின்ற டயலாக் இருக்கிறது பாருங்கள். இதுதான் நம் ஆட்சிக்கும்,  திராவிட மாடல் ஆட்சிக்கும் இருக்கும் வித்தியாசம். நாங்கள் அதை உங்களுடைய உரிமையாக பார்க்கின்றோம். விவசாயிகளுக்கு 6000 வங்கி கணக்கில் வருகிறதா ஐயா ? அது உரிமை என பேசினார்.