மக்களவைத் தேர்தலில் வாக்குகளை பெறுவதற்காகவே குடியுரிமை சட்டத்தை அமல்படுத்தப் போவதாக பாஜக கூறி வருவதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த மக்களவை தேர்தலின் போது அளித்த வாக்குறுதியின் படி ராமர் கோவில் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் குடியுரிமை சட்டம், பொது சிவில் சட்டம் ஆகியவற்றையும் தேர்தலுக்கு முன்பே அமல்படுத்த மத்திய பாஜக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் நெருங்கும் சமயத்தில் வாக்குகளை பெறுவதற்காக குடியுரிமை சட்டம் குறித்து பாஜக ஓலமிட்டு வருவதாக சாடியுள்ளார். அனைத்து காலணிகளுக்கும் முகவரி உள்ளது என்றும் அவர்கள் அனைவரும் இந்திய குடிமக்கள் என்று கூறிய மம்தா பனாஜி குடிமக்கள் இல்லை என்றால் ரேசன், பள்ளி, விவசாய கடன் உள்ளிட்ட உதவிகளை எவ்வாறு பெற முடியும் என கேள்வி எழுப்பியுள்ளார்.