தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் நடிகர் சமந்தா. இவர் தன்னுடைய மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ஏராளமான ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். தமிழில் விண்ணைத்தாண்டி வருவாயா, நீதானே என் பொன்வசந்தம் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இதற்கிடையில் நாக் சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு தற்போது விவகாரத்து பெற்றுவிட்டார்கள்.

இந்த நிலையில் விவகாரத்தை பெற்ற பிறகு நாக சைதன்யா கொடுத்ததாக கூறப்படும் 250 கோடி ரூபாய் குறித்து சமந்தா பேசிய பழைய வீடியோ வைரலாகி வருகிறது. அதாவது விவகாரத்தை பெற்றபோது தான் 250 கோடி ஜீவனாம்சம் பெற்றதாக கூறப்பட்டது. வருமான வரித்துறையினர் வந்து கேட்டால் அப்படி  எதுவுமே இல்லை என்று அவர்களிடம் காட்டுவதற்கு ரெடியாக இருந்தேன் என்று பேசியுள்ளார்.