கேரளா மாநிலத்தில் இருந்து தென்காசிக்கு கேரளா அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது. இந்த பேருந்தை செழியன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். சிஜூ என்பவர் கண்டக்டராக பணியில் இருந்துள்ளார். இந்நிலையில் பத்தினம்திட்டை பகுதியில் வைத்து 40-க்கும் மேற்பட்ட பயணிகள் பேருந்தில் ஏறியுள்ளனர். இதனையடுத்து தமிழக- கேரள எல்லை பகுதியில் இருக்கும் புளியரை போலீஸ் சோதனை சாவடி அருகே வந்த போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தாறுமாறாக ஓடி சாலையோரம் நின்ற டிப்பர் லாரி மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் 3 பெண்கள் உள்பட 25 பேர் காயமடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.