
உத்தரப்பிரதேசத்தின் பரேலியில் நடந்த ஒரு வேதனைக்கிடமான சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வசியம் என்பவரும், அவரது மனைவி ஃபராவும் தங்களது 25வது திருமண நாள் (சில்வர் ஜூபிலி) கொண்டாட்டத்துக்காக, ஒரு தனியார் ஹோட்டலில் உற்சாகமான விருந்தை ஏற்பாடு செய்திருந்தனர்.
விருந்தில் உற்சாகமாக மேடையில் டிஜே இசைக்கேட்டு நடனமாடி இருவரும் மகிழ்ச்சியாக இருந்தனர். ஆனால், சில விநாடிகளில் அந்த சந்தோஷம் மாறி சோகமாகிவிட்டது.
उत्तर प्रदेश के जिला बरेली में शादी की 25वीं सालगिरह पर पत्नी संग डांस कर रहे जूता व्यापारी वसीम की अचानक मौत हो गई !!
कितना खुशनुमा पल था। पत्नी का हाथ थामकर डांस कर रहे थे। अचानक स्टेज पर ही गिर पड़े। pic.twitter.com/v4CWQQdQdz
— Sachin Gupta (@SachinGuptaUP) April 3, 2025
நடனம் ஆடிக்கொண்டிருந்த வசியம் திடீரென மேடையில் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோதும், மருத்துவர்கள் வசியம் ஏற்கனவே உயிரிழந்ததாக அறிவித்தனர்.
மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வசியம் பரேலியில் ஒரு வியாபாரியாகவும், ஃபரா ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாகவும் இருந்தனர். இந்த சோகமான சம்பவத்தின் வீடியோ ஹோட்டலின் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.