தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக ஜொலிக்கும் நடிகர் அஜித்தின் துணிவு மற்றும் நடிகர் விஜயின் வாரிசு திரைப்படங்கள் கடந்த மாதம் 11-ஆம் தேதி ரிலீஸ் ஆகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் விஜய் நடித்திருந்த வாரிசு திரைப்பட த்தில் ராஷ்மிகா ஹீரோயினாக நடித்திருந்தார். இதேபோன்று எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் நடிகர் அஜித் நடித்த துணிவு படத்தில் மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடித்திருந்தார்.
இந்த இரு படங்களுமே 200 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்துள்ள நிலையில், இன்று 25-வது நாளில் வாரிசு மற்றும் துணிவு திரைப்படங்கள் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. மேலும் இந்த மகிழ்ச்சியை துணிவு மற்றும் வாரிசு பட குழுக்கள் போஸ்டர் வெளியிட்டு தெரியப்படுத்தியுள்ளது. இந்த போஸ்டர்கள் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்கள்.