திமுக-காங்கிரஸ் இடையே நீண்ட காலமாக நிலவி வந்த கூட்டணி அமைப்பு தற்போது சீர்குலையக் கூடிய சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.
கூட்டணிக்குள் ஏற்பட்ட முரண்பாடுகள் குறித்து பெரம்பலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஆர்விஜே. சுரேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுகவுடன் இணைந்து நாங்கள் பல தேர்தல்களில் போட்டியிட்டோம். ஆனால் தற்போதைய சூழ்நிலையில், கூட்டணியில் இருந்து விலகும் நிலை உருவானால், அதன் தாக்கம் திமுக மீது கடுமையாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவித்ததாவது, “தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கி மிக முக்கியமானது என்பதை நிரூபிக்கவும், தமிழகத்தில் தனிக்கட்சி என்ற வகையில் வளர்ச்சி பெற்று வரும் எங்கள் நிலையை உறுதிப்படுத்தவும், வரவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட தயாராக உள்ளோம்.
“கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினால் திமுக அனைத்து தொகுதியிலும் தோல்வியை தழுவும்; தமிழகத்தில் காங்கிரஸ் வளர்ச்சியை காட்டுவதற்காகவும், வாக்கு வங்கியை நிரூபிப்பதற்காகவும் 234 தொகுதியிலும் தனித்து போட்டியிட தயாராக உள்ளோம்” – பெரம்பலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்… pic.twitter.com/3NPsQnWaMN
— PttvOnlinenews (@PttvNewsX) September 25, 2025
“>
கூட்டணிக்குள் மதிப்பு இல்லாத நிலை தொடருமானால், மக்கள் நலனுக்காகவே நாங்கள் தனிப்பாதை தேடத் தயார்” என்றார். இந்த அறிவிப்பு, எதிர்கால தேர்தல் களத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
