
உத்திரபிரதேச மாநிலத்தில் 17 வயதுடைய 12 ஆம் வகுப்பு மாணவி ஒரு வாரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கடந்த மார்ச் மாதம் 29ஆம் தேதி வாரணாசி பகுதியில் உள்ள ஒரு பாருக்கு சிறுமி தன் நண்பருடன் சென்றுள்ளார். அங்கு சிறுமியின் நண்பர்கள் குளிர்பானத்தில் போதை மருந்து கலந்து கொடுத்து அங்கிருந்து அழைத்துச் சென்றனர். பின்னர் கிட்டத்தட்ட ஒரு வார காலமாக அந்த சிறுமியை அவர்கள் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அதன்படி கடந்த மாதம் 29ஆம் தேதி முதல் ஏப்ரல் 3ஆம் தேதி வரை கிட்டத்தட்ட 7 நாட்களாக அந்த சிறுமியை அவர்கள் பலாத்காரம் செய்துள்ளனர்.
மொத்தம் 23 பேர் பலாத்காரம் செய்த நிலையில் அதில் சிலர் அந்த சிறுமியின் வகுப்பு தோழர்கள் மற்றும் சிலர் instagram நண்பர்கள். இதில் மொத்தம் 11 பேரை போலீசார் அடையாளம் கண்டு கைது செய்த நிலையில் மீதமுள்ளவர்களை தேடி வருகின்றனர். அந்த சிறுமியின் குடும்பத்தினர் கடந்த 4-ம் தேதி தன் மகள் காணாமல் போனதாக புகார் கொடுத்துள்ளனர். பாலியல் பலாத்காரம் பற்றி நேற்று தான் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் 11 பேர் கைதாகியுள்ளனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.