G.O.A.T திரைப்படத்தில் 23 வருடங்களுக்குப் பிறகு விஜய்க்கு ஜோடியாக நடிகை சினேகா நடிக்கிறார். இந்த படத்தில் இரண்டு தோற்றத்தில் விஜய் நடித்து வருவது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். இதில் அப்பா விஜய் கேரக்டருக்கு நடிகை சினேகாவும் மகன் விஜய் கேரக்டருக்கு மீனாட்சி சவுத்ரியும் ஜோடியாக நடித்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கு முன்பு 2023 ஆம் ஆண்டு வெளியான வசீகரா திரைப்படத்தில் சினேகா விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தி தற்போது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.