
கேரள மாநிலம் திருமூலபுரத்தை சேர்ந்தவர் ரோஷன் வர்கீஸ். இவர் வழிப்பறி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக காவல்துறையினரால் தேடப்பட்டு வந்துள்ளார். இதுவரை 22 வழக்குகளில் தேடப்பட்டு வந்த ரோஷன் வர்கீஸ் திருச்சூர் – பாலக்காடு வழித்தடத்தில் இயக்கப்பட்ட பேருந்து ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளில் அடிப்படையில் கைது செய்யப்பட்டார்.
அவருடன் மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கேரளா மட்டுமல்லாது கர்நாடகா வரை இவர்களது வழிப்பறி கொள்ளை சம்பவம் நீண்டுள்ளது. இதில் அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால் 22 வழக்குகளில் தேடப்பட்டு வந்த வழிப்பறி கொள்ளையனான ரோஷன் பர்கீஸ் இன்ஸ்டாகிராமில் 50000 பாலோவர்களை கொண்டுள்ளார்.
சமூக வலைதளத்தில் நாம் பின்தொடரும் ஒருவரின் உண்மையான அடையாளம் என்ன என்பது பற்றி தெரிந்து கொள்ளாமலேயே பாலோ செய்து அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறோம் என்பதற்கு ரோஷன் வர்கீஸ் ஒரு எடுத்துக்காட்டு.