தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான த்ரிஷா, தற்போது தூக்கமின்மை (Insomnia) பிரச்சனையால் அவதிப்பட்டு வருவதாகத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாகப் படப்பிடிப்பு மற்றும் பயணங்கள் காரணமாக நடிகர்களுக்குத் தூக்கமின்மை ஏற்படுவது வழக்கம் தான் என்றாலும், த்ரிஷா வெளியிட்டுள்ள அந்த ‘வினோத கணக்கு’ ரசிகர்களைக் கவலையடையச் செய்துள்ளது. அதில், “நாம் ஒரு மணி நேரத் தூக்கத்தை இழந்தால், அதனை ஈடுகட்ட சுமார் 4 நாட்கள் ஆகும்.

அந்த கணக்குப்படி பார்த்தால், நான் இழந்த தூக்கத்தை ஈடுகட்டி நன்றாக உணர 2062-ம் ஆண்டு ஆகிவிடும்” எனத் த்ரிஷா பதிவிட்டுள்ளார். அதாவது, தான் இயல்பான நிலைக்குத் திரும்ப இன்னும் 36 ஆண்டுகள் ஆகும் எனத் த்ரிஷா நகைச்சுவையாகவும் அதே சமயம் வேதனையாகவும் குறிப்பிட்டுள்ளார். 40 வயதைக் கடந்த நிலையிலும் இன்றும் டாப் ஹீரோயினாக வலம் வரும் த்ரிஷா, விடாது உழைத்துக் கொண்டிருப்பதால் ஏற்பட்ட உடல்நலச் சோர்வுதான் இது எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
