
ஒன்பதாவது ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி நியூசிலாந்து அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதில் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்தியா தோல்வியை சந்திக்காமல் கோப்பையை கைப்பற்றியது. இந்த நிலையில் ஆஸ்திரேலியாலியா அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் 2027 உலகக்கோப்பையில் ரோகித் சர்மா விளையாடுவார் என்று கணித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “சாம்பியன் டிராபியின் இறுதிப்போட்டியில் ரோஹித் சர்மா விளையாடியதை பார்க்கையில் நான் இன்னும் நன்றாக விளையாடிக் கொண்டிருக்கிறேன் என்பதை உணர்த்துவது போல் இருந்தது. விளையாட்டில் சிறந்து விளங்கும் நேரத்தில் ஒவ்வொருவரும் வீரரின் ஓய்வுக்காக காத்திருப்பார்கள் .அது ஏன் என்று தெரியவில்லை? என்று கூறியுள்ளார்.