
மதுரை மாவட்டம் உத்தங்கடியில் திமுக கட்சியின் தலைவரும் முதல் வருமான ஸ்டாலின் தலைமையில் தற்போது திமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கியுள்ளது. இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் வந்த நிலையில் முதலில் கலைஞர் கருணாநிதி, பேரறிஞர் அண்ணா, பெரியார் மற்றும் பேராசிரியர் அன்பழகன் ஆகியோரது திருவுருவப்படங்களுக்கு மரியாதை செலுத்தினார். அதன் பிறகு பகல்காம் தாக்குதலில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் திமுக பொதுக்குழு கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க ஸ்டாலினை மீண்டும் முதல்வராக 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற அயராது உழைப்போம் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில் சில…
- முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் பிறந்தநாளான ஜூன் 3-ஆம் நாளை செம்மொழி நாளாக நாடெங்கும் கொண்டாடுவோம்.
- மக்களின் பேராதரவுடன் தொடர் வெற்றி நாயகராகத் திகழும் கழகத் தலைவர் – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க ஸ்டாலின் அவர்களுக்குப் பாராட்டுகள்.
- இந்தியாவுக்கே முன்னோடியாக மகளிர் வாழ்வை மேம்படுத்தும் திராவிட மாடல் அரசுக்குப் பாராட்டு.
- உழவர்கள், நெசவாளர்கள், மீனவர்கள் என அனைத்துத் தரப்பினரின் வாழ்விலும் புதிய விடியல் தந்த திராவிட மாடல் அரசின் சாதனைகளைப் பரப்புவோம்.
- தமிழினத்திற்குப் பெருமை சேர்த்த தலைவர்களைப் போற்றும் கழக அரசுக்குப் பாராட்டு.
- ஒவ்வொரு குடும்பமும் பயன்பெற்றுள்ள திராவிட மாடல் அரசின் சாதனைத் திட்டங்களைத் தொடர்ந்து மக்களிடம் எடுத்துரைப்போம்.
- தமிழ்நாட்டின் எதிர்கால நம்பிக்கையாக மக்களின் பேராதரவைப் பெற்றுள்ள துணை முதலமைச்சர் இளம் தலைவர் அவர்களின் பணி தொடரத் துணை நிற்போம்.
- ஏழை-எளிய மக்களை வதைக்கும் நகைக்கடன் கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி உடனே நீக்க வேண்டும்.
- தமிழ்நாட்டிற்குத் தரவேண்டிய நிதியைத் தர மறுக்கும் ஒன்றிய அரசுக்குக் கண்டனம்.
- தமிழர்களின் மொழி உணர்வுடன் விளையாடாமல் இந்தித் திணிப்பைக் கைவிடுக.
- கீழடி ஆய்வை மறுக்கும் தமிழ் விரோத ஒன்றிய பா.ஜ.க அரசுக்குக் கண்டனம்.
- இரயில்வே திட்டங்களில் தமிழ்நாட்டைப் புறக்கணிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு கண்டனம்.
- சிறுபான்மையினர் உரிமைகளைப் பறிக்கும் நோக்கில் இசுலாமியர் சொத்துக்களைச் சூறையாடும் வக்பு திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறுக.
- ஒன்றிய விசாரணை அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்தும் ஒன்றிய பா.ஜ.க. அரசுக்குக் கண்டனம்.
- பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியில் தொடரும் அநீதிகளுக்கு கடும் கண்டனம்.
- மீனவர்கள் நலன் காக்க கச்சத்தீவை மீட்டிடுக.