
தமிழகத்தின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று விக்கிரவாண்டியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, தமிழ்நாட்டில் 2026 இல் கண்டிப்பாக திமுக தான் வெற்றி பெறும். எந்த திசையிலிருந்து யார் வந்தாலும் 2026-ல் கண்டிப்பாக திமுகவின் வெற்றியை தடுக்க முடியாது. டெல்லியில் இருந்து வந்தாலும் சரி தமிழ்நாட்டில் இருந்து வந்தாலும் சரி, கண்டிப்பாக 2026ல் திமுக ஆட்சி அமையும் அதனை யாராலும் தடுக்க முடியாது என்று கூறினார். இதேபோன்று கோயம்புத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலினும் கண்டிப்பாக 2026 ஆம் ஆண்டு தேர்தலில் திமுக ஆட்சியில் நிச்சயம் அமையும் என்று அடித்து கூறினார்.
மேலும் முன்னதாக விக்கிரவாண்டியில் 2026 ஆம் ஆண்டு தேர்தலோடு குடும்ப ஆட்சி செய்யும் அந்தக் கட்சியை ஆட்சியில் இருந்து அகற்றுவோம் என்று விஜய் மறைமுகமாக விமர்சித்திருந்த நிலையில் தற்போது விக்கிரவாண்டியில் உதயநிதி ஸ்டாலின் பேசியது கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் தமிழக வெற்றி கழகத்தின் செய்தி தொடர்பாளர் மீண்டும் தமிழ்நாட்டில் எம்ஜிஆர் ஆட்சி அமையும் என்றும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் திமுகவின் ஆட்சியை விஜய் தகர்த்தெறிவார் என்றும் கூறியிருந்த நிலையில் தற்போது முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் கூறியது விஜய்க்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமைந்துள்ளது.