தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் விஷால். இவர் நடிகர் சங்கத்தின் செயலாளர் ஆவார். நடிகர் விஷால் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலை முன்னிட்டு முன்னதாக புதிய கட்சி தொடங்குவேன் என்றும் இது குறித்து முறையான அறிவிப்பு வெளியாகும் என்றும் அறிவித்திருந்தார். ஏற்கனவே நடிகர் விஷால் தன்னுடைய ரசிகர்கள் மன்றம் சார்பில் பொதுமக்களுக்கு பல்வேறு விதமான உதவிகளை செய்து வருகிறார். அதோடு பொது கருத்துகளையும் தன் மனதில் பட்டதை வெளிப்படையாக துணிந்து பேசக்கூடியவர். இந்நிலையில் நடிகர் விஷால் தற்போது தமிழக வெற்றிக் கழகத்தில் தான் இணைய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது.

இதுகுறித்து அவர் கூறியதாவது, நான் தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாட்டில் நிச்சயம் கலந்து கொள்வேன். என்னை விஜய் அழைத்தாலும் அழைக்காவிடிலும் பரவாயில்லை. கண்டிப்பாக விஜயின் செயல்பாடுகளை கவனிக்க வேண்டியுள்ளதால் நான் ‌ மாநாட்டுக்கு செல்வேன். நான் இன்னும் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைவது குறித்து முடிவெடுக்கவில்லை. இருப்பினும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் நான் ஒரு வேட்பாளராக இருக்க கூட வாய்ப்பு உள்ளது என்று கூறினார். மேலும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் விஷால் தற்போது போட்டியிடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் அவரே தற்போது வரும் சட்டசபை தேர்தலில் நான் ஒரு போட்டியாளராக இருக்க கூட வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளார்.