
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். அதன்பிறகு 2026 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக்கழகம் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் என்று நடிகர் விஜய் அறிவித்துள்ள நிலையில் புதிய உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அதன்பிறகு தவெக கட்சியின் தலைவராக இருக்கும் நடிகர் விஜய் நாடாளுமன்ற தேர்தலில் நல்ல வாக்குகள் பெற்று மாநில கட்சி அங்கீகாரம் பெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் நாம் தமிழர் கட்சிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். அதன் பிறகு சீமான் தனக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் விஜய்க்கு நன்றி தெரிவித்தார்.
இதனால் நாம் தமிழர் கட்சியுடன் நடிகர் விஜய் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் கூட்டணி அமைப்பார் என்று கூறப்பட்டது. இதற்கு தற்போது தவெக கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விளக்கம் கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, சீமானுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக கட்சியின் தலைவர் விஜய் தான் முடிவு செய்வார். சட்டசபை தேர்தல் வருவதற்கு இன்னும் 2 வருடங்கள் இருப்பதால் யாரும் அவசரப்பட வேண்டாம். அதன் பிறகு வருகின்ற 18ஆம் தேதி தவெக நிர்வாகிகள் கூட்டம் எதுவும் நடத்த திட்டமிடப்படவில்லை என்று கூறியுள்ளார். மேலும் இதனால் நாம் தமிழர் மற்றும் தவெக கட்சியின் கூட்டணி குறித்து பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.