
காஞ்சிபுரத்தில் 5000 குடும்பங்களுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கினார். அதன் பிறகு உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, நாம் அரசியல் செய்கிறோமோ இல்லையோ ஆளுநர் ரவி நன்றாக அரசியல் செய்கிறார். சட்டசபையில் ஆளுநர் வாக்கிங் செய்கிறார். அவர் வருவதும் தெரியவில்லை போவதும் தெரியவில்லை. ஆளுநருக்கு வரிந்து கட்டிக்கொண்டு வரும் இயக்கமாகத்தான் அதிமுக இருக்கிறது.
2024 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. பிரதமர் மோடி பல வித்தைகளை செய்து பார்த்து நிலையிலும் அவரால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. 2026 தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி ஒன்றாக வரும் நிலையில் கண்டிப்பாக அவர்களை விரட்டுவது சுலபம். மேலும் சட்டமன்ற தேர்தல் முடிவடைந்த பிறகு 11 தோல்வி எடப்பாடி பழனிச்சாமி என்று அழைக்கப்படுவார் என்று கூறினார்.