சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் மு க ஸ்டாலின் பேசுகையில், இளைஞர்கள் நலனில்  திமுக அதிக அக்கறை காட்டி வருகிறது. அடுத்த தேர்தலை பற்றி அல்ல. அடுத்த தலைமுறை பற்றி சிந்திக்கும் அரசு இது. கடந்த மூன்று வருடங்களில் மொத்தம் 65,483 இளைஞர்களுக்கு அரசு பணி நியமனம் வழங்கப்பட்டிருக்கிறது.

5.10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக 19,260 பணியிடங்கள் நிரப்பப்படும். 2026 ஜனவரிக்குள் 46 ஆயிரம் அரசு பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தெரிவித்துள்ளார்.