2023 ஆம் ஆண்டு முடிவடைந்து 2024 ஆம் ஆண்டு தொடங்குவதற்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் அடுத்த ஆண்டில் நான்கு கிரகணங்கள் தோன்றும். இதில் இரண்டு சூரிய கிரகணங்களும் இரண்டு சந்திர கிரகணங்களும் இருக்கும்.

2024 ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மார்ச் 25ஆம் தேதி நிகழும். ஆனால் இதனை இந்தியாவில் பார்க்க முடியாது. அடுத்ததாக 2024 ஆம் ஆண்டின் இரண்டாவது சந்திரகிரகணம் செப்டம்பர் 18ஆம் தேதி நிகழ்வு. ஐரோப்பா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, வடகிழக்கு, ஆசியா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, பசிபிக், அட்லாண்டிக், ஆர்டிக் மற்றும் அண்டார்டிகாவின் பெரும் பகுதிகளில் இது தெரியும் என கூறப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் எட்டாம் தேதி நிகழும். இதனை இந்தியாவில் பார்க்க முடியாது. முழு சூரிய கிரகணம் மெக்சிகோ, அமெரிக்கா மற்றும் கனடாவை கடந்து செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக 2024 ஆம் ஆண்டின் இரண்டாவது சூரிய கிரகணம் அக்டோபர் இரண்டாம் தேதி நிகழும். இந்த கிரகணத்தை இந்தியாவில் பார்க்க முடியாது.