
உலகளவில் வருடந்தோறும் ஆயிரக்கணக்கான திரைப்படங்கள் ரிலீஸ் ஆகிறது. அதிலும் குறிப்பாக தமிழ் திரையுலகில் மட்டும் 100-க்கும் அதிகமான படங்கள் வெளியாகிறது. நடப்பு ஆண்டு ரிலீஸ் ஆகவுள்ள முன்னணி நடிகர்கள் நடித்திருக்கும் சில திரைப்படங்கள் குறித்த பட்டியலை நாம் இப்போது தெரிந்துக்கொள்வோம். அதன்படி பாபு யோகேஸ்வரன் டைரக்டு செய்துள்ள தமிழரசன் படம் வருகிற மார்ச் 30ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக தெரிகிறது.
அதேபோல் டைரக்டர் ஒபிலி கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடிக்கும் “பத்து தல”, இயக்குனர் வெற்றிமாறன் டைரக்டு செய்துள்ள “விடுதலை” படத்தின் முதல் பாகம், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி உள்ள “கேப்டன் மில்லர்”, மடோன் அஸ்வின் டைரக்டில் சிவகார்த்திகேயன் நடிக்கும் “மாவீரன்”, டைரக்டர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிக்கும் “தங்கலான்”, இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் டைரக்டில் உருவாகி இருக்கும் “ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்”, கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி இருக்கும் “இந்தியன்-2”, நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் “ஜெயிலர்”, இயக்குனர் மணிரத்தினத்தின் “பொன்னியின் செல்வன்-2”, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி நடிக்கும் “லியோ”, சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் “42”, தல அஜித் குமார் நடிப்பில் உருவாகும் ஏகே-62 ஆகியவை நடப்பு ஆண்டு திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என்று சொல்லப்படுகிறது.