2022 ஆம் ஆண்டு நடைபெற்ற டெட் தேர்வு விடைத்தாள் ஒன்று மற்றும் தாள் 2 ஆகியவற்றை பதிவிறக்கம் செய்ய ஆசிரியர் தேர்வு வாரியம் மீண்டும் அனுமதி வழங்கியுள்ளது. 2022 டெட் விடைத்தாள் 1,2 ஆகியவற்றை பதிவிறக்கம் செய்வது விடுபட்டதாக அதிக எண்ணிக்கையில் மனுக்கள் வந்தன. இதனைத் தொடர்ந்து நவம்பர் 7 முதல் நவம்பர் 30ம் தேதி வரை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் இந்த தேர்வு விடைத்தாள்களை தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.