அமெரிக்காவை சேர்ந்த பிரபல விமான தயாரிப்பு நிறுவனம் போயிங் ஆகும். இந்த நிறுவனம் ராக்கெட்டுகள், செயற்கைக்கோள்கள், தொலை தொடர்பு சாதனங்கள், ஏவுகணைகளை தயாரித்து உலக நாடுகளுக்கு விற்பனை செய்து வருகின்றது. இதில் சமீப காலமாக அந்நிறுவனம் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், அந்நிறுவனத்துடைய “போயிங் 737 மேக்ஸ்” ரக விமானங்கள் இரண்டும் ஐந்து மாத இடைவெளியில் அடுத்தடுத்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்துகளுக்கு காரணம் அந்த விமானத்தின் உடைய வடிவமைப்பே என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது அந்நிறுவனத்திற்கு பெரிய ஏமாற்றமாக அமைந்தது. இந்த நிலையில் போயிங் நிறுவன அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது “நிதி மற்றும் மனித வளங்கள் பிரிவில் பணிபுரியும் 2000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளோம். மேலும் மேற்குறிப்பிட்ட பிரிவில் ஆட்குறைப்பு செய்யும் போது பொறியியல் மற்றும் உற்பத்தி பிரிவில் பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்போம். அதுமட்டுமல்லாமல் உற்பத்தி பிரிவில் 15,000 பேரை கடந்த ஆண்டு பணியமர்த்தினோம். அதேபோல இந்த ஆண்டு மேலும் 10000 பேர் பணியமர்த்தப்படுவார்கள்” என்று கூறியுள்ளது.