புழக்கத்தில் உள்ள 2000 நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மே 23 முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரை மக்கள் அதனை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம். ஆனால் ஒருமுறைக்கு அதிகபட்சமாக 320,000 மட்டுமே மாற்ற முடியும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இந்நிலையில்2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள நிலையில் அதனை உடனடியாக மாற்ற முடியாது எனவும் வருகின்ற மே 23ஆம் தேதி முதல் தான் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான நடைமுறைகள் அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2000 ரூபாய் நோட்டு வைத்திருப்பவர்கள் தங்கள் அக்கவுண்டில் டெபாசிட் செய்யலாம். வங்கி கடன்களுக்கு திருப்பி செலுத்தலாம். இதனைத் தவிர பரிவர்த்தனைகளுக்கும் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை பயன்படுத்தலாம் எனவும் எந்த கட்டுப்பாடுகளும் இல்லை எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.