கர்நாடகாவின் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று சரியாக ஒரு வாரத்திற்கு பிறகு சித்தராமையா இரண்டாவது முறையாக முதல்வராகவும், மாநில காங்கிரஸ் தலைவர் டி கே சிவகுமார் துணைத் தலைவராகவும், எட்டு சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சராகவும் இன்று பதவி ஏற்றனர். 75 வயதான சித்தர் அமையா 2013ஆம் ஆண்டு முதல் ஐந்தாண்டு காலத்திற்குப் பிறகு இரண்டாவது முறையாக தற்போது முதலமைச்சரானார். சீத்த ராமையா அரசியல் அமைச்சராக பணியாற்றிய 61 வயதான சிவகுமார் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வரை கட்சியின் கர்நாடக மாநில தலைவராகவும் நீட்டிப்பார். மொத்தமுள்ள 224 தொகுதிகளில் காங்கிரஸ் 135 இடங்களில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கர்நாடகாவில் காங்கிரஸ் சார்பில் அறிவிக்கப்பட்ட ஐந்து முக்கிய திட்டங்களை நிறைவேற்ற அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இன்று நடந்த முதல் அமைச்சரவை கூட்டத்தில், மாதம் 200 யூனிட் இலவசம் மின்சாரம், வேலையில்லா பட்டதாரிகளுக்கு 3000 ரூபாய் உதவித்தொகை, பெண்களுக்கு மாதம் 2000 ரூபாய், 10 கிலோ இலவச ரேஷன் அரிசி மற்றும் மகளிருக்கு பேருந்தில் இலவச மொழிட்டு ஐந்து திட்டங்களையும் விரைவில் நிறைவேற்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.