தேசிய விடுமுறைகள், பண்டிகை நாட்கள் மற்றும் சிறப்பு தினங்களை பொறுத்து வங்கி விடுமுறை தினங்கள் மாநில வாரியாக முன்பாக வெளியிடப்படுகிறது. இதை அறிந்துகொண்டு மக்கள் தங்கள் வங்கி சார்ந்த பணிகளை திட்டமிட்டுக்கொள்வர். இந்த நிலையில் மே 19-ம் தேதியான நேற்று நாட்டில் ரூ.2,000 நோட்டுகள் அனைத்தும் செப்டம்பர் 30-ம் தேதி வரை மட்டுமே செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு இதற்காக வங்கிகளில் சென்று மக்கள் நேரடியாக பணத்தை மாற்றிக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக வழக்கத்தை விட அதிக மக்கள் கூட்டம் வங்கிகளில் இருக்கும் என உறுதியாக தெரிகிறது. இதனால் மக்கள் வங்கி விடுமுறைகளை தெரிந்துக்கொண்டு, அதற்கேற்றாற் போன்று தங்களது பணிகளை திட்டமிட்டு முடித்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர்.

கீழே மீதம் உள்ள மே மாத நாட்களில் மற்றும் ஜூன் மாத வங்கி விடுமுறை தினங்கள் பட்டியலிடப்பட்டு உள்ளது. இதை தவிர மாதத்தின் 2-வது மற்றும் 4-வது சனிக்கிழமைகள் மற்றும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும்.

விடுமுறை பட்டியல்

மே 22-மகாராணா பிரதாப் ஜெயந்தி சிம்லா

ஜூன் 15-YMA தினம் ஐஸ்வால்

ஜூன் 20-காங் (ரதஜாத்ரா) இம்பால்

ஜூன் 28-பக்ரி ஈத் (ஈத்-உல்-ஜுஹா) பேலாபூர், மும்பை, நாக்பூர் மற்றும் திருவனந்தபுரம்

ஜூன் 29-பக்ரி ஈத் (ஈத்-உல்-அதா) அனைத்து மாநிலம்

ஜூன் 30-ரெம்னா நி ஐஸ்வால்