இந்தியாவின் கடந்த 2016 ஆம் ஆண்டு 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் இவை செல்லாது என்று சமீபத்தில் ரிசர்வ் வங்கி அறிவித்தது. இந்த ரூபாய் நோட்டுகள் செப்டம்பர் 30ஆம் தேதி வரை வங்கிகளில் திருப்பி செலுத்த ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கிய நிலையில் பொதுமக்கள் அனைவரும் தங்களிடம் இருந்த 2000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் மாற்றிக் கொண்டனர்.

இந்த நிலையில் பொதுமக்களின் வசதிக்காக அக்டோபர் 7ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் தற்போது ரிசர்வ் வங்கி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி மூ3.5 ரூபாய் மதிப்புடைய 2000 ரூபாய் நோட்டுகள் வங்கிகள் மூலமாக திரும்ப பெறப்பட்டுள்ளதாகவும் அதாவது 97.26 சதவீதம் 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் 2000 ரூபாய் நோட்டுகள் சட்டப்படி செல்லும் எனவும் ரிசர்வ் வங்கி தற்போது அறிவித்துள்ளது.