இந்தியாவில் தற்போது மக்கள் பலரும் அதிக அளவு சேமிப்பு கணக்கு தொடங்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அப்படி வங்கிகளில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர்கள் அவர்களுடைய கணக்கில் எவ்வளவு பணம் வைத்திருக்க வேண்டும் என்ற வரைமுறையும் உள்ளது. இன்றைய காலகட்டத்தில் அதிகரிக்கும் பண மோசடி மற்றும் வரி ஏய்ப்பு உள்ளிட்ட குற்ற சம்பவங்களை தடுப்பதற்காக இந்த நிபந்தனை நடைமுறையில் உள்ளது. அதன்படி உங்களுடைய சேமிப்பு கணக்கில் அதிகபட்சம் 10 லட்சம் ரூபாய் வரை நீங்கள் டெபாசிட் செய்ய முடியும். நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய் மட்டுமே டெபாசிட் செய்யலாம்.

இது வருமான வரி வரம்புக்கு உட்பட்டது என்றும் பத்து லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் சேமிப்பு கணக்கில் இருந்தால் வங்கியில் இருந்து பணத்திற்கு அளிக்கப்படும் வட்டிக்கு நீங்கள் அரசுக்கு வரி செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் வருமான வரி தாக்கல் செய்யும்போது பணம் அதற்கு கிடைத்துள்ள வட்டி குறித்த விவரங்கள் அனைத்தையும் வருமானவரித் துறையிடம் நீங்கள் சமர்ப்பிக்க வேண்டிய அவசியம் இருக்கும். எனவே உங்களுடைய சேமிப்பு கணக்கில் வங்கி விதிமுறைகளுக்கு ஏற்ப குறிப்பிட்ட அளவு பணம் வைத்துக் கொள்வது நல்லது.