மத்திய அரசு நடப்பு ஆண்டு பட்ஜெட் தாக்கலின் போது பெண்களுக்காக மகிளா சம்மான்  சேமிப்புச் சான்றிதழ் என்ற திட்டத்தை அறிவித்தது. இந்த திட்டம் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 2025 ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரை செயல்பாட்டில் இருக்கும் எனவும் எந்த வயது பெண்களும் இந்த திட்டத்தில் சேரலாம் எனவும் அரசு தெரிவித்துள்ளது. 18 வயதிற்கு கீழ் உள்ள பெண்கள் பாதுகாவலரின் அனுமதி உடன் இந்த திட்டத்தில் கணக்கு தொடங்கலாம் இதில் குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் முதல் அதிகபட்சம் 2 லட்சம் ரூபாய் வரை நீங்கள் முதலீடு செய்ய முடியும்.

இந்த திட்டத்தில் வருடத்திற்கு 7.5 வழங்கப்படும் நிலையில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வட்டி வரவு வைக்கப்படும். இந்தியாவில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம். இரண்டு வருடத்திற்கு பிறகு திட்டம் முதிர்வடைந்த பின்னர் முழு வட்டி தொகையுடன் பணம் உங்களுக்கு திருப்பி செலுத்தப்படும். இதனைத் தவிர கணக்கு தொடங்கிய ஒரு வருடத்திற்கு பிறகு கணக்கில் இருக்கும் 40 சதவீதம் முதலீட்டை கணக்குதாரர் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.