இந்தியாவில் 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி கடந்த மே மாதம் அறிவித்த நிலையில் பொதுமக்கள் 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. தற்போது பொதுமக்கள் வங்கிகளில் 2000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்து மாற்றி வரும் நிலையில் இந்த பணியை மேற்கொள்ள செப்டம்பர் 30-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அமேசான் நிறுவனம் 2000 ரூபாய் நோட்டுகள் வாங்கப்பட மாட்டாது என்று தற்போது அறிவித்துள்ளது. இ வர்த்தகத் தளத்தில் வாடிக்கையாளர்கள் பொருட்களை ஆர்டர் செய்யும் போது cash on delivery என்ற ஆப்ஷனையும் தேர்வு செய்யலாம். இந்த நிலையில் ஊழியர்கள் பொருட்களை வாங்கும் போது மக்கள் 2000 ரூபாய் நோட்டுகளை தருவதால் வருகின்ற செப்டம்பர் 19ஆம் தேதிக்கு பிறகு இந்தியாவில் 2000 ரூபாய் நோட்டுகள் வாங்கப்பட மாட்டாது என்று அமேசான் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.