மலையாள சினிமாவின் பழம்பெரும் மூத்த நடிகை மீனா கணேஷ். இவர் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள நிலையில் இருபதுக்கும் மேற்பட்ட தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். இவர் பழம்பெரும் தமிழ் நடிகர் கேசவனின் மகள். இவர் உடல்நலக்குறைவின் காரணமாக பாலக்காடு பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க பட்டிருந்த நிலையில் இன்று காலமானார்.

அதாவது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் உயிரிழந்தார். அவருடைய கணவர் கணேஷ் ஒரு திரைப்பட இயக்குனர். இவருடைய மகன் மனோஜ் கணேஷ் ஒரு சீரியல் இயக்குனர். மேலும் தற்போது இவருக்கு 81 வயது ஆகும் நிலையில் திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.