
கணித பாடத்தில் 200க்கு 212, குஜராத்தி மொழிபாடத்தில் 200 க்கு 211 மதிப்பெண்கள் எடுத்த நான்காம் வகுப்பு மாணவி பெற்ற மதிப்பெண்களுடன் கூடிய மார்ச் ஷீட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. குஜராத் மாவட்டம் காரசானா என்ற கிராமம் ஜலோத் தாலுகாவில் உள்ள ஆரம்பப் பள்ளியில் படிக்கும் நான்காம் வகுப்பு மாணவி நிர்ணயத்த மதிப்பெண்ணுக்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளது சந்தேகத்தை எழுப்பிய நிலையில் இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.