சமூக ஊடகங்களில் தினசரி பெரும்பாலான வீடியோக்கள் பதிவிடப்பட்டாலும் அவற்றில் ஒரு சில மட்டுமே பார்வையாளர்களை கவர்கிறது. அதிலும் குறிப்பாக விலங்குகளின் வீடியோகளுக்கு  இணையத்தில் தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். ஆனால் தற்போது வெளியாகியுள்ள ஒரு வீடியோ காண்பவர்களை மிரள வைத்துள்ளது.

அந்த வீடியோவில் 20 அடி நீளமுள்ள 2 மலைப் பாம்புகள் ஜோடியாக ஊர்ந்து செல்வதை நம்மால் பார்க்க முடிகிறது. இந்த பாம்புகள் பார்ப்பதற்கு பயங்கரமாக உள்ளது. ஆக்ரோஷமாக உள்ள இந்த 2 பாம்புகளும் தண்ணீர் பாட்டிலுக்கு இரு இடையிலும் ஒன்றாக செல்வதை நாம் வீடியோவில் காண முடிகிறது.