இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (LSG) அணியின் புதிய மென்டராக இணைந்த ஜாகிர் கான், 20 ஆண்டுகளுக்குப் பிறகு தன் பழைய ரசிகையை மீண்டும் சந்தித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2005-ல் நடந்த TVS கப் டெஸ்ட் தொடரில், இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போட்டியில், ‘I Love You Zaheer’ என எழுதப்பட்ட பலகை பிடித்த ரசிகையின் வீடியோ வைரலானது. அப்போது, சக வீரர் யுவராஜ் சிங் கிண்டல் செய்தபோது, ஜாகிர் கான் அந்த ரசிகைக்கு பிளையிங் கிஸ் கொடுத்து அந்த ரசிகையை வெட்கப்பட வைத்தார். தற்போது, லக்னோ அணியில் மென்டராக சேர்ந்த பிறகு, அதே ரசிகை, அதே பலகையுடன் அவரை வரவேற்றதால், ஜாகிர் கான் ஆச்சரியத்தில் உறைந்தார். இதற்கான வீடியோவை லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அதிகாரபூர்வமாக வெளியிட்டது.

மேலும், ஜாகீர் கான் தற்போது LSG அணியின் பவுலிங் பயிற்சியாளராகவும் செயல்பட உள்ளார். இதற்கு முன்பு, கெளதம் கம்பீர் அந்த அணியின் மென்டராக இருந்தார், ஆனால் அவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணியில் இணைய, அந்த பொறுப்பை ஜாகீர் கான் ஏற்றுள்ளார். IPL 2025 சீசனில், ரிஷப் பண்ட் லக்னோ அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அவரை 27 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் வாங்கி, IPL வரலாற்றிலேயே அதிக விலையிலான வீரராக லக்னோ அணியில் இணைத்துள்ளனர். முன்னாள் கேப்டன் கே.எல்.ராகுல் அணியை விட்டு வெளியேறியதைத் தொடர்ந்து, இந்த முக்கியமான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. IPL 2024 சீசனில் லக்னோ அணிக்கு சிறப்பான விளையாட்டு நடக்காததால், புதிய தலைமையில் அணி IPL 2025 தொடரில் வெற்றி பெற திட்டமிட்டுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by cricket.com (@cricket.com_official)